தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் கம்பம் போக்குவரத்து டிப்போ முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி தருகிறது.
டிப்போவில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பணியாளர்கள் பேருந்துகளை இயக்குவதற்கு மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
இந்த நிகழ்வானது மழை வரும்போதெல்லாம் நடப்பதாகவும், சாலைவசதிகளும் இல்லை என குற்றச்சாட்டு வருவதுடன் இதுகுறித்து போக்குவரத்து டிப்போ அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சிய நிலையில் செயல்படுவதாகவும் போக்குவரத்து பணியாளர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுங்கள் இல்லையேல் ஸ்விம்மிங் பூல்னு நெனச்சு யாராச்சும் குளிக்க போறாங்க..என சிரமத்திலும் சிரிக்கின்றனர்.
