வேலூரில் பாமக சார்பில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கருத்தரங்கம் மாவட்ட செயலாளார் இளவழகன் முன்னிலையில் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், முதலமைச்சரை கணக்கெடுப்பு நடத்தாமல் இருக்க முதல்வரை சுற்றி இருக்கின்ற அமைச்சர்களும், அதிகாரிகளும் தவறாக வழி நடத்துகிறார்கள் என்று நினைக்கின்றேன். ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். தந்தை பெரியாரின் வாரிசு என்று பேசுவதற்கு தகுதி இல்லாதவர்கள் சமூக நீதி மாநாடு நடத்துவார்கள். ஆனால் சமூக நீதியை நிலைநாட்ட மாட்டார்கள். தமிழக மக்களை இனியும் ஏமாற்றாதீர்கள் முதலமைச்சரே. உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று ஏமாற்றாதீர்கள். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துங்கள். ஏதோ கணக்கெடுப்பு கருத்தரங்கம் நடத்துகிறார்கள் என்று நினைக்காதீர்கள். வீதியில் எங்களை இறக்கி விடாதீர்கள் பின்னர் நாடு தாங்காது. சமூகநீதியை பற்றி பேச உங்களுக்கு தகுதி கிடையாது முதலமைச்சரே .ஒரு வார்த்தையாவது சொல்லுங்கள் முதலமைச்சரே. அதுக்கு கூடவா மனசு வரவில்லை. இனிய சமூகநீதியை பற்றி பேசாதீர்கள். உங்களுக்கு சமூகநீதியை பற்றி பேச தகுதியே கிடையாது என்றார்.
