தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' என்ற கலைவிழா தொடங்கியது.
சென்னை தீவுத்திடலில் தொடங்கிய இந்த விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், கிராமிய உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், பாரம்பரியத்தை பறைசாற்றும் 40 வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
