வேலூர் மாவட்டம், கே.வி.
குப்பம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து ஜேசிபி, டிப்பர் லாரி, டிராக்டர் மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் வட்டாட்சியர் கலைவாணியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கே.வி. குப்பம் தாலுகாவில் உள்ள ஆற்றுப்படுகையில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு தேவையான மணலை அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் பலன் பெரும் வகையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
அதேபோல் ஏரி மண், வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாகவும், கட்டுமான பணிகளுக்கு தேவையான கிராவல் மண் சாலை அமைப்பதற்கு தேவையான மண் ஆகியவற்றை அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர் .
இது குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் கலைவாணி அரசிடம் பேசி உரிய முடிவை அறிவிப்பதாக கூறி அவர்களை கலைந்து போகச் செய்தார்.
இதனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
.jpg)