தேனி மாவட்டம் போடியில் குரங்கனி செல்லும் சாலையில் ரேஷன் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனம் கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரேஷன் பொருட்களை கொண்டு செல்லும் TN60(X2533) என்ற எண் கொண்ட போடி டவுண், கடை எண் நான்கின் வாகனமானது ஓட்டுனரின் காட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது.
இதனால் வாகன ஒட்டிக்கு எந்த ஒரு விபத்தும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.மேலும், இந்த விபத்தால் இப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜேசிபி வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த வாகனத்தை மீட்டனர்.
கடந்த பல மாதங்களாகியும் போடி-குரங்கணி செல்லும் இப்பகுதியில் மேம்பாலம் கட்டுவதாக சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மேலும், சாலைகள் கரடு, முரடாக காட்சி தருவதால் வாகன ஒட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மழைக்காலங்களில் சாலைகள் மோசமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
தேனி மாவட்ட நிர்வாகம் இதனை கருதி சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போடி நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
