வேலூர் மாவட்டம், லத்தேரி அருகே அதிகாலையில் மான் வேட்டையாடிய இரண்டு பேரை துப்பாக்கியுடன் வனத்துறை அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த பனமடங்கி காப்பு காட்டு பகுதியில் மான் வேட்டை ஆடுவதாக மாவட்ட வன அலுவலர் கலாநிதிக்கு தகவல் கிடைத்தது. வேலூர் வனச்சரகர் குமார் உத்தரவின் பேரில், லத்தேரி பிரிவு வனவர் அருணா, வனக்காப்பாளர்கள் தணிகைவேல், ஜெயசுதா, சங்கர் ஆகியோர் லத்தேரி அடுத்த கீழ் முட்டுக்கூர் அடுத்த சென்ராயன் பள்ளி செம்மண் குட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காப்பு காட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கியால் புள்ளிமானை வேட்டையாடிய இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை வனத்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் விரிஞ்சிபுரம் அடுத்த செதுவாலை பகுதியைச் சேர்ந்த கார்த்தி, சஞ்சய் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் நாட்டு துப்பாக்கியையும் வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
.jpg)