வழி காட்டும் குறள் மணி (85).
அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.(திருக்குறள் 1007)
பொருள்:
வறியவருக்கு ஒன்றைக் கொடுக்காதவனது செல்வம் ,மிக்க அழகுடைய பெண் மணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து முதுமை அடைவது போன்றது.
அதிகாரம் 101, நன்றி இல் செல்வம்.
