தூத்துக்குடியில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இந்திய மாணவர் சங்க செயலாளருக்கு அறம் விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த2022ம் ஆண்டு கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்த காலகட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்பான பணி மேற்கொண்டனர்.
இவர்கள் காய்ச்சல் அறிகுறியோடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இருக்குமிடம் சென்று உணவு வழங்குவது, தடுப்பூசி போட வருகிறவர்களின் விவரங்களை பதிவு செய்தல் போன்ற பணிகளை 50 நாட்கள் சிறப்பாக செய்தனர்.
இந்திய மாணவர் சங்கத்தின் பணியை பாராட்டும் விதமாக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், வணிகர் சங்கம் குறிப்பாக மாவட்ட நிர்வாகம் பாராட்டு விழாக்களை நடத்தியது.
இந்நிலையில், மாணவர்களை ஒருங்கினைத்து சிறப்பாக பணி செய்ததற்காக இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜாய்சனுக்கு அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பாக சமூக மேம்பாட்டிற்கான இளைஞர் விருது வழங்கப்பட்டது.
.jpg)