சென்னையில் இன்று துவங்குகிறது சென்னை புத்தக கண்காட்சி.
சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடங்குகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் சென்னை 47வது சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடங்கி ஜனவரி 21ம் தேதி வரை நடைபெறுகிறது.
47வது சென்னை புத்தக கண்காட்சி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதில் சுமார் ஆயிரம் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேற்படி புத்தக கண்காட்சியினை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
புத்தக கண்காட்சி வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் நடைபெறுகிறது.
இதற்கான நுழைவு சீட்டுகளை ஆன்லைன் மூலமாகவும வாங்கிக் கொள்ளலாம்.

