தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணி செய்து வருபவர் தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பாபுசங்கர் (52).
இவர் மாநகராட்சி அலுவலகம் அருகிலுள்ள ஜெயராஜ் சாலை பகுதியில் 05ம் தேதியன்று இரவு 11:45 மணியளவில் தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் குப்பைகளை பிரித்து தரும்படி கேட்டுள்ளார். அப்போது அந்த ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகன் இவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜாதி பெயரை கூறி தரக்குறைவான வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த பாபுசங்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதையடுத்து தாக்கிய ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மகன் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாநகராட்சி மேயர் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
