தாயின் கண்முன்பே குழந்தையை தூக்கி சென்ற சிறுத்தையினால் குழந்தை உயிரிழந்த பரிதாபம்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் இன்று மீண்டும் ஒரு சிறுவனை சிறுத்தை தூக்கி சென்றது.
சிறுவன் சம்பவ இடத்திலே உயிரிழந்தான் இதனால் பந்தலூர் தாலுக்கா முழுவதும் பொதுமக்கள் சாலமறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வனவிலங்குகள் மனிதர்களுடனான மோதலை தொடர்ந்து நடத்திக்கொண்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஒரு சிறுமியை சிறுத்தை தாக்கியது இன்று பந்தலூர் மேங்குறிஞ்சி என்ற பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளிகள் அதிகமான பேர் வசித்து வருகிறார்கள் மேங்குறிஞ்சி சடையனார் கோவில் அருகே அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது.
இந்த அங்கன்வாடியில் ஏராளமான குழந்தைகள் குழந்தைகள் உள்ளன அங்கன்வாடி மையத்துக்குள் சிறுத்தை புகுந்து குழந்தையை தூக்கி சென்றது பொதுமக்கள் சத்தம் எழுப்பி விரட்டினார்கள் ஆனால் குழந்தையை தூக்கி சென்று விட்டது சிறுத்தை தற்சமயம் குழந்தை உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் பந்தலூர் தாலுகா முழுவதும் பதற்றம் நிலவுகிறது தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அரங்கேறும் பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தை பொதுமக்கள் முன்னெடுக்க போவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி எத்தனையோ ஆர்பாட்டம், போராட்டங்கள் நடைபெற்றது,
அத்தனை போராட்டங்களையும் அலட்சியப்படுத்திய வனத்துறை மற்றும் காவல் துறை
இன்றைக்கு ஐந்து வயது சிறுவனை சிறுத்தை தாக்கி படுங்காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
தொடர்சியாக நடை பெறும் வன விலங்கு தாக்குதலை முறியடிக்க வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை,
எந்த பகுதியில் வன விலங்குகள் இருக்கிறதோ அந்த பகுதியில் மக்களுக்கு வாகனம் மூலம் எச்சரிக்கை செய்ய கூடிய செயல்களை கூட செய்யாமல் மெத்தனமாக இருப்பது கண்டிக்க தக்கது.
வனத்துறையின் எத்தனை கொக்கை காரணம் பொதுமக்கள் குற்றச்சாட்டு பந்தலூர் தாலுகா பலப்பகுதியில் வனத்துறையினை கண்டித்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியலில் ஈடுபடனர்.
