வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட 14வது வார்டு குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் ஒட்டுமொத்த துப்புரவு பணி தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு குடியிருப்போர் நலச் சங்க தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார் .மாநகராட்சி கவுன்சிலர் சாமுண்டீஸ்வரி குணாளன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக காட்பாடி 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா மற்றும் காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் எஸ். சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் வேலூர் மாநகராட்சி 14வது வார்டு குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து நடத்தும் பொது தூய்மை பணி தொடக்க நிகழ்ச்சியில் குப்பைகளை கண்ட இடங்களில் வீச வேண்டாம். அவரவர் வசிக்கும் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து குப்பை வாங்க வரும் துப்புரவு பணியாளரிடம் வழங்க வேண்டும். கண்ட இடங்களில் குப்பைகளை எரிக்க வேண்டாம். அனைத்து வாடு மக்களும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி துணை நிற்போம் என்றும் தெரிவித்தனர் .அதேபோன்று வீட்டில் உபயோகப்படுத்தும் மருத்துவக் கழிவுகளை தனியாக தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து 100% நெகிழியை தவிர்ப்போம் என்றும் இந்த 14வது வார்டு குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு உண்டான அனைத்து பணிகளையும் காட்பாடி 1வது மண்டல குழு சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
