குமரிமாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா மற்றும் அதிமுக குடும்ப காணும் பொங்கல் விழா இன்று சைமன்நகர் பகுதியில் வைத்து மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்,ராணி ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான.தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்களுடன் இணைந்து காணும் பொங்கலிட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து எம்எல்ஏ தளவாய்சுந்தரம் தலைமையில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி காணும் பொங்கல் நிகழ்ச்சியை கொண்டாடினர்.
