தேனி மாவட்டம் கம்பம் நகரில் இரண்டு வார காலமாக சாக்கடை நீர் கால்வாய் தேங்கி சாலையில் ஓடுகிறது. இதனால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும்,சாக்கடை நீர் சாலையில் செல்லும் அவலத்தால் கம்பம் நகர் பாதசாரிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். பலமுறை இதுகுறித்து பொதுமக்கள் கம்பம் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நகராட்சி நிர்வாகத்தினர் இந்த சாக்கடை நீரானது கோதாவரி ஆற்றில் கலக்குமா? கிருஷ்ணா நதியில் கலக்குமா என்பதை ஆழ்ந்து கவனித்து வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். பொதுமக்களின் புலம்பல்களை கண்டுகொள்ளாத கம்பம் நகரத்தை கூவமாக மாற்ற முற்படும் நகராட்சி நிர்வாகத்தால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அவதி அடைந்துள்ளனர்.
இதனை கருதி தேனி மாவட்ட நிர்வாகத்திடமிருந்து நடவடிக்கை எனும் ஆபர் வருமா பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மக்களின் நலனை காக்க வேண்டிய சிலரின் அலட்சியத்தால் அரசின், முதல்வரின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் செயலகவே இருக்கிறது என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

