மாநில அளவில் ஊட்டியில் நடைபெறும் கராத்தே போட்டியில் பங்கேற்க
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கராத்தே வீராங்கனைக்கு நிதி உதவி வழங்கினர்.
தூத்துக்குடி விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மாணவி வைஷ்ணவி தொடர்ந்து முறையாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறார்.
மாவட்ட அளவில் பல்வேறு கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது ஜனவரி 6 மற்றும் 7ம் தேதி ஊட்டியில் நடைபெறும் மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது.
போட்டியில் கலந்து கொள்வதற்கான தேவையான உபகரங்கள் மற்றும் கட்டணத் தொகையை செலுத்த முடியாத சூழ்நிலையில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் உதவியை நாடினார்.
போட்டியில் கலந்து கொள்வதற்கான உபகரணங்கள் கட்டணம் மற்றும் போக்குவரத்து செலவின தொகையை மாணவி வைஷ்ணவிக்கு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன உதவி மேலாளர் ஜி.சிவக்குமார் வழங்கி போட்டியில் வெற்றி பெற வாழ்த்தினார்.
இதில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ்.ஜே.கென்னடி, ஒருங்கிணைப்பாளர்
எஸ்.பானுமதி. கராத்தே மாஸ்டர் விஜயசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
