கோவை மக்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற பைக் - அப்பாச்சி ஆர்டிஆர் 160 வாகனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்...

sen reporter
0


 மக்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற பைக் - அப்பாச்சி ஆர்டிஆர் 160 வாகனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்...

உலகளவில் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் முன்னணி வகிக்கும் டிவிஎஸ் நிறுவனம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத்தை ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தி வருகிறது.இந்நிலையில் வாகன பிரியர்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற வாகனத்தை டிவிஎஸ் நிறுவனம்  தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

குறிப்பாக இளைஞர்கள் அதிகம் விரும்பும் அப்பாச்சி இருசக்கர வாகனத்தின் புதிய தயாரிப்பில் ஆர்டிஆர் 160  மற்றும் ஆர்டிஆர் 160 4வி எனும் கம்பீரமான புத்தம் புதிய கருப்பு நிற பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில்  உள்ள லீ மெரிடியன் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.இதில் புதிய அப்பாச்சி கருப்பு நிற பதிப்பை டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிரிவின் வணிகத் தலைவர் விமல் சும்ப்லி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் ப்ரீமியம் மோட்டார் சைக்கிள் ப்ராண்ட்களில் ஒன்றாகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. டிவிஎஸ் அப்பாச்சியின் அபாரமான தொடர் செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில், டி.வி.எஸ் அப்பாச்சி  சீரிஸ் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு மிகச்சரியான சான்றாக திகழ்கிறது. இப்போது, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 வரிசையானது, கம்பீரமான,  தோற்றத்தின் உத்வேகத்துடன் பார்த்த நொடியில் கவனத்தை ஈர்க்கும் புத்தம் புதிய பிளாக் எடிஷனுடன் களமிறங்கி உள்ளது.’’ என்றார்.

இந்த அப்பாச்சி இருசக்கர வாகனத்தில் நவீன முறையிலான எல்இடி, டிஸ்க்,மற்றும் ஸ்போர்ட்ஸ்க்கு பயன்படுத்தும் விதமாகவும்,வெயில், மழை உள்ளிட்ட காலநிலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில்,டிவிஎஸ் மோட்டாரின் துணைத்தலைவர் யு.பி பாண்டே கலந்து கொண்டார்..

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top