வேலூரில் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்!
May 16, 2024
0
வேலூரில் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்!வேலூரில்திருமலை திருப்பதிதேவஸ்தான ஸ்ரீவெங்கடாஜலபதி சுவாமி கோயில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம்செய்யப்படுகிறது.கோயில் விரிவாக்க பணிக்காக ஏசிஎஸ் அறக்கட்டளை சார்பில் அதனுடைய அறங்காவலர் ஏசிஎஸ் அருண்குமார், அவரது தந்தையும் டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பல்கலைக்கழக வேந்தருமான ஏ.சி. சண்முகம் ரூ 60 லட்சத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு சென்னையில் தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமிக்கு கோயில் கட்ட டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி. சண்முகம் ரூ. 1 கோடியை நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. தேவஸ்தானம் சார்பில் ரூபாய் 3 கோடியே 75 லட்சத்தையும் பொதுமக்கள் சார்பில் ரூ. 1 கோடியே 25 லட்சமும் நிதி திரட்டி இந்த கோயில் பணிகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகையை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டியிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.