வேலூர் தொகுதி குடியாத்தத்தில் புதிய நீதிக் கட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள்!!
May 16, 2024
0
வேலூர் பாராளுமன்ற தொகுதி குடியாத்தத்தில் புதிய நீதிக் கட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு குளிர்பானங்கள் வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா முன்னிட்டு, லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய நீதி கட்சியின் சார்பில் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் உத்தரவின்பேரில், மகளிர் அணி மண்டல இணைச் செயலாளர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. நகரில் பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்களை தேடிச் சென்று குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. புதிய நீதிக் கட்சியின்நகரச் செயலாளர் எஸ்.ரமேஷ், ஐ.டி.விங் மண்டல செயலாளர் தி.பிரவீன்குமார், நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் தோழமைக் கட்சி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.