மீனவர்களுக்கு எச்சரிக்கை!
May 15, 2024
0
மீனவர்களுக்கு எச்சரிக்கை!கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்றும் நாளையும் (மே. 15 & 16) கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடுவதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.