தேனி மாவட்டம் கல்லாரு ஆற்றில் சிக்கியவர்களை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்!!!
தேனி மாவட்டம் கல்லாரு சின்னம்பாளையம் ஆற்றில் சிலர் சிக்கி கொண்டு ஆற்றை கடக்க முடியாமல் இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை தொடர்ந்து தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மா.சந்திரகுமார் உத்தரவுப்படியும், உதவி மாவட்ட அலுவலர் ரா.குமரேசன் அவர்கள் ஆலோசனைப்படியும், பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி அவர்களின் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் விரைந்து சென்று ஆற்றில் சிக்கி தவித்தவர்களை காப்பாற்றினர்.மேலும், ஆற்றில் சிக்கி தவித்தவர்கள் சின்னூர் காலனியை சேர்ந்த பிச்சை, முருகன், கணேசன், மற்றும் நாகராஜ் என்பது தெரியவந்தது.இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன் விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினரை அந்த நான்கு நபர்களின் குடும்பத்தினரும், தேனி மாவட்ட மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.