வேலூர் மாவட்டம் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலட் சுமி தொடங்கிவைத்தார்.
May 15, 2024
0
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி தனியார் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி, பல்கலைக்கழக வளாகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, உயர் கல்வி வழிகாட்டும் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.சுபலட்சுமி, துணை காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) அதியமான், முத்துரங்கம் அரசு கல்லூரி முதல்வர் முனைவர் அ.மலர், உரிமையியல் நீதிபதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ள செல்வி ஐஸ்வர்யா, முதன்மைக் கல்வி அலுவலர் செ.மணிமொழி, உதவி இயக்குநர் திறன் மேம்பாட்டு அலுவலகம் காயத்ரி, மாணவ மாணவிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.