ஆன்லைனில் இழந்த பணம்
ரூ 1.77 லட்சம் மீட்பு !
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு நபர்கள் ஆன்லைனில் இழந்த பணம் ரூ. 1.77 லட்சத்தை வேலூர் சைபர் கிரைம் போலீசார் மீட்டனர். வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணத்தை இழந்தவர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் மீண்டும் காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன், காவல் ஆய்வாளர் புனிதா உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பணத்தை இழந்தவர்கள் தங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு காவல்துறைக்கு தங்களது நன்றியை தெரிவித்து சென்றனர்.