வேலூரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 13 கோரிக்கை மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் பெற்றுக்கொண்டார் .இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வது ஆகும் என்று அவர் தெரிவித்தார். அதாவது இந்த 13 புகார் மனுக்கள் பணம் கொடுத்தல், ஏமாற்றுதல் மற்றும் வீடு அபகரித்தல், ரவுடிகள் தொல்லை, வீட்டுமனை பிரச்சனை மற்றும் பல்வேறு அடிதடி வழக்குகள் என பல்வேறு தரப்பு புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன். அந்த புகார் மனுக்களை அந்தந்த குறிப்பிட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்களை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து அதன் முடிவை தனக்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் .