தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசுப் பள்ளியில் மாணாக்கருக்கு ஆதார் எடுக்கும் முகாம்!!!
உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆதார் முகாமானது பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜாபர் ஜாதிக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்
(பொ) செல்லக்கண்ணு ஆசிரியப் பயிற்றுநர்களான அழகுராஜா, வளர்மதி மாற்றுத் திறனாளி சிறப்பு ஆசிரியர் ஜெகன்,
இல்லம் தேடிக் கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பணியினை இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் அனுசுயா அவர்கள் மேற்கொண்டு வருகிறார்.