வேலூரில் பெரியார் பூங்கா மீண்டும் திறக்க ஏற்பாடு!
வேலூரில் உள்ள பெரியார் பூங்காவை தனியார் நிறுவனம் பராமரித்து வந்தது. பின்னர் பல காரணங்களால் தனியார் நிறுவனம் பூங்கா பராமரிப்பு பணியை செய்யாமல் சில ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது. இதனால் பூங்காவை மாநகராட்சி மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தது. இன்னும் இரண்டு மாதத்திற்குள் அதாவது ஆகஸ்ட் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த பூங்காவை கொண்டுவர நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.