பொள்ளாச்சி மக்களவைத் தேர்தல் வாக்கு என்னும் மையத்தில் போலீசார் பாதுகாப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

sen reporter
0


 பொள்ளாச்சி மக்களவைத் தேர்தல் வாக்கு என்னும் மையத்தில் போலீசார் பாதுகாப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் உள்ள பொள்ளாச்சி தொண்டாமுத்தூர் கிணத்துக்கடவு உடுமலை மடத்துக்குளம் வால்பாறை சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது 

வாக்கு எண்ணிக்கை பணிகள் நாளை  நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பார்வையாளர்களாக தேர்தல் ஆணையத்தால் அனுராக் சவுத்ரி மற்றும் நிதீஷ் குமார் தாஸ் எனும் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணிகளும், அதை தொடர்ந்து 8:30 மணிக்கு மேல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக நான்கடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய பாதுகாப்பு படையினர், தமிழக காவல் துறையினர்,தேர்தல்  அலுவலர்கள் என மொத்தம் 105 அலுவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியை  சுற்றி 100 மீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கும், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் போதிய அத்தியாவசிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது

 தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணிகளை கண்காணிக்கும் வகையில் 360 டிகிரியில் கேமராக்களும், சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளனபொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 97,467 வாக்காளர்களில்

 11 லட்சத்து 24 ஆயிரத்து 743 பேர் வாக்களித்தனர் வாக்குகளை எண்ணுவதற்கு மொத்தம் 84 வாக்கு எண்ணிக்கை  மேசைகளும், தபால் வாக்கு எண்ணிக்கைகாக 7 மேசைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 மொத்தம் 23 சுற்றுக்களாக  நடைபெறும் வாக்கு எண்ணிக்கை பணியில் 102 வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள் 102  உதவியாளர்கள், 115 நுண் பார்வையாளர்கள் என மொத்தம்  319 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top