கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்கத்தவறிய திமும அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தேமுதிக கோவை ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்ப்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தேமுதிக-வினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பேரவை துணைச் செயலாளர் சக்திவேல்
கள்ளக்குறிச்சி மட்டுமில்லாமல் விழுப்புரம் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி,உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கள்ளச்சாரத்தை ஒழிப்போம் என்று பொய்யாக வாக்குறுதி குறித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக விற்பனை ஆகி வருகிறது.மேலும் கருணாநிதி ஆட்சி காலத்தில் இருந்து கள்ளக்குறிச்சியில் கள்ளச்சார இருக்கிறது.
அமைச்சர் முத்துசாமி கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலகி கொண்டு ஆட்சியை ராஜினாமா செய்து பொது தேர்தலில் நிற்க வேண்டும்.
தமிழகத்தில் போதை இல்லாத மாநிலமாக முதல்வர் ஸ்டாலின் உருவாக்க வேண்டும் இல்லை என்றால் ஆட்சியை ராஜினாமா செய்ய வேண்டும் என தேமுதிக சக்திவேல்பேரவை துணைச் செயலாளர் கூறினார்.