வேலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
வேலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டி. எம்.கதிர் ஆனந்த் வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அப்போது வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நந்தகுமார் மற்றும் அணைக்கட்டு பாபு மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் புடைசூழ சென்றது குறிப்பிடத்தக்கது.