வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சூரியன் உதித்தது தாமரையும், இரட்டை இலையும் கருகியது!

sen reporter
0


 வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சூரியன் உதித்தது- தாமரையும், இரட்டை இலையும்  கருகியது !

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சூரியன் உதித்தது. தாமரை கருகியது அதிமுக டெபாசிட் இழந்தது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டி எம் கதிர ஆனந்த் 2 லட்சத்து 15 ஆயிரத்து 72 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

 நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி கடந்த 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரி தொகுதிக்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. அதை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அதன்படி வேலூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேலூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதையொட்டி வாக்கு எண்ணும்  மையத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் தலைமையில் ஏஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் ஆயுதப்படை, சிறப்பு காவல் படை, துணை ராணுவத்தினர் என 200 பேர் கொண்ட மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து நுழைவு வாயிலில் அதிநவீன சுழல் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. வேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான சுப்புலட்சுமி, தேர்தல் பார்வையாளர்கள் ரூபேஷ் குமார், உஜ்ஜுவல் போர்வெல் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் தபால் வாக்குகள் எண்ணிக்கை நடந்தது. அதை தொடர்ந்து 8:30 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஆண்கள் 7,40,222, பெண்கள் 7,87,838, திருநங்கைகள் 213 உட்பட 15, 28,273 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 5, 48  787, பெண்கள் 5,74,826, திருநங்கைகள் 102 உட்பட 11 லட்சத்து 23 ஆயிரத்து 715 வாக்குகள் பதிவானது. இது தவிர தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் ஆகியோரது தபால் வாக்குகள் 7385 பதிவானது. சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக வேலூர், அணைக்கட்டு, கே. வி. குப்பம் ,குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 தொகுதிகளுக்கான வாக்குகள் தனித்தனி அறையில் எண்ணப்பட்டு முடிவுகள் சுற்றுவாரியாக வெளியிடப்பட்டன. அதன்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளும் 14 மேசைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 1874 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை எண் முதல் சுற்றில் தொடங்கி 21 வது சுற்று வரை தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் டி. எம். கதிர்ஆனந்த் முன்னிலை வகித்தார். அதன்படி இறுதிச்சுற்றில் திமுக வேட்பாளர் டி. எம். கதிர் ஆனந்த் ஐந்து லட்சத்து 66 ஆயிரத்து 435  வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பசுபதி ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 964 வாக்குகளும், பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 3,50,956 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்த் 527 வாக்குகளும் பெற்றனர். மேலும் நோட்டாவுக்கு 869 வாக்குகள் பதிவாகின. அதேபோல் பதிவான தபால் ஓட்டுகளில் திமுக வேட்பாளர் டி. எம். கதிர்ஆனந்த் 2257 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பசுபதி 718 வாக்குகளும், பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 2034 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேஷ் ஆனந்த் 191 வாக்குகளும், மன்சூர் அலிகான் 35 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 67 தபால் வாக்குகள் கிடைத்தன. இறுதியில் திமுக வேட்பாளர் டி. எம். கதிர் ஆனந்த் 5 லட்சத்து 68,692 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் பாஜக கூட்டணியின் புதிய நீதி கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 3 லட்சத்து 52 ஆயிரத்து 990 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் திமுக வேட்பாளர் டி .எம் .கதிர் ஆனந்த் 2,15,22 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்தார்.அதை தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றிதழையும் அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் திமுக வேட்பாளர் டி. எம் .கதிர் ஆனந்த் பெற்றுக்கொண்டார். அப்போது எம்எல்ஏக்கள் ஏ.பி. நந்தகுமார் ,கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு ஆகியோர் உடன் இருந்தனர். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அபார வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் டி. எம். கதிர்ஆனந்த் எம்.பி. ஆக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் எழுச்சியை எதிர்கொள்ள முடியாமல் சூரியனின் தாக்கத்தை தாள முடியாமல் கோடை காலம் என்பதால் சூரியனின் உஷ்ணம் தாமரையையும், இரட்டை இலையையும் கருகி சறுகாக்கியது குறிப்பிடத்தக்கது. இதுதான் தேர்தல் இதுதான் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு .மக்கள் அளிக்கும் தீர்ப்பு தான் மகேசன்  அளிக்கும் தீர்ப்பு என்று பொதுமக்கள் பேச ஆரம்பித்துள்ளனர். 10 ஆண்டுகள் மோடியின் ஆட்சியின் மீது நம்பிக்கை இழந்த பொதுமக்கள் 40க்கு 40 என்று தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு தங்களது வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர் வாக்காள வள்ளல்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. அதிமுக வேட்பாளர் பசுபதி டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top