தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கள்ளக்குறிச்சி விவகாரத்தை CBCID வசம் ஒப்படைக்க உத்தரவு!!!
6/19/2024
0
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட கருணாபுரம் காலனியை சேர்ந்த 26நபர்கள் வாந்தி, வயிற்றுவலி மற்றும் வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாக தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து காவல்துறையினர், மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு மேலே குறிப்பிடப்பட்ட நபர்கள் பாக்கெட் சாராயத்தை அறிந்திருக்கக்கூடும் என்பது விசாரணையில் தெரியவந்தது.இதனை தொடர்ந்து பிரவீன்குமார், சுரேஷ் என்பவர்கள் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்கள். அனுமதிக்கப்பட்ட 26நபர்களில் 2நபர்கள் இறந்துவிட்ட நிலையில் மற்ற அனைவக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரியிலிருந்து நான்கு சிறப்பு மருத்துவர்களை கொண்ட மருத்துவர் குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து 18நபர்கள் அவசரகால ஊர்தியின் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.6நபர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பார்வையிடுவதற்காக தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குனர் திரு.கோவிந்தராவ், இ.ஆ.ப.மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோர் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளனர். பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கண்ணுகுட்டி என்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 200லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வகக்கூடகத்திற்கு அனுப்பப்பட்டதில் அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இது மாண்புமிகு தமிழக முதல்வர் பார்வைக்கு சென்றவுடன் உடனடியாக மாண்புமிகு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு, மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர உதாரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், அரசானது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.குறிப்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் அனைவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், தமிழக முதலமைச்சர் அவர்கள் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், மேல்நடவடிக்கைக்காகவும் உடனடியாக CBCID வசம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்துள்ளார்.
