நீலகிரி மாவட்ட கோத்தகிரி பகுதிக்கு மத்திய இணை அமைச்சர் l.முருகன் வருகை
June 22, 2024
0
நீலகிரி மாவட்ட கோத்தகிரி பகுதிக்கு மத்திய இணை அமைச்சர் L.முருகன் வருகை புரிந்தார். நீலகிரி தொகுதி தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோத்தகிரி காமராஜர் சதுக்க பகுதியில் வருகை புரிந்தார் அப்போது கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து வரவேற்றனர் தொடர்ந்து பேசுகையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா துறையை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , தேயிலுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , படுகர் இன மக்களை ஆதிவாசி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார் தொடர்ந்து கட்சி தொண்டர்களை தொடர்ந்து கட்சிப் பணியை சிறப்பாக பணியாற்றுமாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.