தாக்குதலால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். உயிர்பலி அச்சத்தால் குழந்தைகள் பள்ளி செல்வதற்கு பயந்தும்,பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கும் பயந்தவாறே வாழ்ந்து வருகின்றனர். யானைகளின் தாக்குதல் அச்சுறுத்தலுக்கு தீர்வு காண வனத்துறை அதிகாரிகளிடம்
இப்பகுதி மக்கள் கோரிக்கைகள் பல வைத்தவாறே உள்ளனர்.
இதுகுறித்து பள்ளி குழந்தைகளின் எதிர்கால படிப்புகள் குறித்தும், பொதுமக்கள் நலன் கருதியும் யானைகளின் தாக்குதல்களில் இருந்து எங்களை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் ஒற்றை கோரிக்கை விடுத்துள்ளனர்.