சேர்க்காட்டில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடத் திறப்பு விழாஅமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மற்றும் காந்தி பங்கேற்பு
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, சேர்க்காட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.12.46 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் க.பொன்முடி தலைமையிலும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரி கட்டடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினர். இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார், வேலூர் ப.கார்த்திகேயன், குடியாத்தம் (தனி தொகுதி) அமுலு விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் மு.பாபு, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் மா.சுனில்குமார், காட்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் வே.வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன், காட்பாடி 1வது மண்டலக்குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மண்டல இணை இயக்குநர் உயர்கல்வி (கல்லூரி கல்வி) முனைவர். அ.மலர், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் த.ஆறுமுகம், சேர்க்காடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் நா.இந்திராகாந்தி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள், மாணவ ,மாணவிகள் என திரளானோர் இந்த கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்றனர். விழா இறுதியில் கல்லூரி முதல்வர் இந்திராகாந்தி நன்றியுரையாற்ற விழா நிறைவுபெற்றது.
