வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்!
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம் அளித்தனர். பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் அவர் உறுதியளித்தார். மேலும் மனுக்களை தொடர்புடைய காவல் நிலையங்களுக்கு வழங்கி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணன் உத்தரவிட்டார். பொதுமக்கள் மிகவும் நம்பிக்கையுடனும், திருப்தியுடனும் புகார் மனுக்களை அளித்துவிட்டு வீடு திரும்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
