தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி. ஷஜீவனா IAS அவர்கள் ஆனைமலையன்பட்டி ஊராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வாரா பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட ஆனைமலையன்பட்டி ஊராட்சி பட்டாளம்மன் கோவில் தெரு 2வது வார்டில் சாக்கடை கழிவுநீரானது தெரு முழுவதும் ஓடுவதால் அப்பகுதி மக்கள் நாள்தோறும் புலம்பி வருகின்றனர். மேலும், கழிவுநீரால் மாலை நேரங்களில் கொசுக்கள் அதிகம் காணப்படுவதாவும், இதனால் நோய்த்தொற்று பயத்துடனும் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து வார்டு மக்கள் ஆனைமலையன்பட்டி ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் ஊராட்சி தலைவரானவர் இதுநாள் வரை அப்பகுதியை எட்டிக்கூட பார்க்காமல் உள்ளதாக மக்கள் வேதனையுடன் புலம்புகின்றனர். இதனை தொடர்ந்து BDO விடம் அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்கவேண்டி புகார்
தெரிவித்தும் இந்நாள் வரை BDO செவிசாய்க்காமல் மக்களை அலட்சியப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. பட்டாளம்மன் கோவில் தெரு 2வது வார்டு பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி என்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது.மேலும், அப்பகுதியில் அரசாங்க அதிகாரி ஒருவர் குடியிருந்து வருவதாகவும் குறிப்பாக,அந்த அதிகாரியின் ஆணைப்படித்தான் ஊராட்சிமன்ற தலைவரும், BDOவும் நடந்துகொள்வதாகவும்,அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.பட்டாளம்மன் கோவில் 2வது வார்டு மக்கள் கோரிக்கை விடுத்தால் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இருப்பதும், அப்பகுதியில் குடியிருக்கும் அரசு அதிகாரியின் பேச்சை மட்டும் கேட்டு அதன்படி நடக்கும் ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.சாக்கடை கழிவுநீரானது தெருவில் ஓடுவதால் நடவடிக்கை எடுக்க அப்பாவி பொதுமக்கள் புகார் கொடுத்தால் அவர்களுக்கு மிரட்டல் விடுத்து நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கருதி ஆனைமலையன்பட்டி ஊராட்சியில் கோரிக்கை விடுத்த மக்களுக்கு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா IAS அவர்கள் நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்..