தேனி மாவட்டம் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு!!!
ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்டபொம்மையகவுண்டன் பட்டி -பெரியகுளம் சாலையின் ஓரத்தில் கழிவுகளை கொட்டி வருவதால் அப்பகுதி முழுக்க துர்நாற்றம் வீசுகிறது.இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் கழிவுகளால் நோய்த்தொற்று ஏற்பட்டு பெரியவர்கள் முதல் பச்சிளம் குழந்தைகள்வரை அடிக்கடி மருத்துவமனை செல்வதாக புகார் எழுந்துள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை மூடிக்கொண்டு இப்பகுதியை கடந்து செல்வது தினம்தோறும் காணப்படுகிறது. கழிவுகளை கொட்டுபவர்களின் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் கூறினாலும், கழிவுகளை கொட்டும் நபர்களை விட்டுவிட்டு புகார் கொடுக்கும் பொதுமக்களை ஊராட்சி நிர்வாகம் உதாசீனப்படுத்துவதாக மக்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர். இப்பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு உயிர்பலி ஏற்பட்டால் ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற்குமா என இப்பகுதி மக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.புகார் தரும் பொதுமக்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் மீது தேனி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா மக்கள் எதிர்பார்ப்பு.