இந்திய ரூபாயின் புதிய குறியீடான ₹ மத்திய அரசால் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட தினம் இன்று.
( 15 ஜூலை 2010).
2009 ல் மத்திய அரசு இந்திய ரூபாயின் புதிய வடிவத்திற்காக நாட்டு மக்களிடமிருந்து அதற்கான வடிவங்களை வரைந்து அனுப்புமாறும் இதற்கான பரிசுத்தொகை ரூ.2,50,000 என அறிவித்தது.
மத்திய அரசின் கோரிக்கையின்படி பல்லாயிரக்கணக்கானோர் அனுப்பி வைத்தனர்.
இவற்றில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த, IIT Guwahati யில் professor ஆக பணிபுரியும் Dr.உதயகுமார் அனுப்பிய ₹ தேர்வானது.