ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட புது நகரில் கடந்த மாதம் விஷவாயு தாக்கி 3-பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் புது நகர், கம்பன்,மூகாம்பிகை நகர் ஆகிய பகுதிகளில் மீண்டும் விஷவாயு வெளியாகியதாக கூறி அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுச்சேரி விழுப்புரம் நெடுஞ்சாலையில் சாலையில்
மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.