கோத்தகிரி ராமசந்த் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலைக் சரிசெய்ய மக்கள் கோரிக்கை.
July 04, 2024
0
கோத்தகிரி ராமசந்த் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலைக் சரி செய்ய மக்கள் கோரிக்கை.தேவையான இடங்களில் பார்க்கிங் இல்லை என்ற பலகைகள் இல்லாததால் ஆங்காங்கே நிறுத்தப்படும் வாகனங்களால் அதிக நெரிசல் ஏற்படுகிறது.மேலும் மேட்டுப்பாளையம் செல்வதற்கு சரியான வழிகாட்டி பலகை இல்லாததால் சுற்றுலா பயணிகள் வழி தவறி இந்த பகுதிக்கு வருவதும் வாகன நெரிசலுக்கு காரணமாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.பள்ளி குழந்தைகள் நடந்து செல்லும் பாதை என்பதால் இதனை சரி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.