நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் உலா
July 04, 2024
0
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி இரவு , பகல் நேரங்களில் குடியிருப்பு, தேயிலை தோட்டங்களிலும் சர்வ சாதாரணமாக உலா வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி அருகே கொட்டக்கம்பை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் லட்சுமி (57) என்பவர் தேயிலை பறிக்க சென்றுள்ளார் அப்போது கரடி
ஒன்று திடீரென லட்சுமியை தாக்கியுள்ளது இதில் தலை கால் கைகளில் பலத்த காயம் ஏற்பட்ட லட்சுமி அம்மாள் கூச்சலிட்டதால் கரடி அங்கிருந்து சென்றுள்ளது பின்பு அருகில் இருந்தவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் கரடி கடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதனை தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்