தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் வேண்டும் என்கிற கோரிக்கையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் கடந்தமாதம்அமைச்சர் பார்த்து ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாதன் கோரிக்கை வைத்தார். அமைச்சரும் இந்த நிதியா ஆண்டில் ஆலங்குளத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படும் என்றார் அதன் அடிப்படையில் வருகிற திங்கள் கிழமை நீதி அரசர்கள் நீதிமன்ற கட்டடம் கட்டும் இடத்தை பார்வையிட இருக்கிறார்கள் .
இடத்தை கழகத்தின் சார்பில் சீர் செய்யும் பணியை செய்துவிட அறிவுறுத்திய முன்னாள் மாவட்ட செயலாளர் சிவ. பத்மநாதன் அதனை முன்னிட்டு முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவ.பத்மநாதன் , ஒன்றிய சேர்மன் காவேரி, சீனித்துறை ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பா, ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி சத்யராஜ் ஆகியோர் முன்னிலையில் இடத்தை பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியின் போது ஒன்றிய கழகச் செயலாளர் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர். முருகன், கருமனூர் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், வெள்ளகால் ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், புதுப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சண்முகராம், பேரூராட்சி கவுன்சிலர் சுந்தரம், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தங்க. செல்வம், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மோகன்லால், மாவட்ட முன்னாள் பொறுப்பு குழு உறுப்பினர் மேகநாதன், இளைஞரணி அரவிந்த் திலக் மாவட்ட பிரதிநிதி அன்பழகன், குறும்பலாப்பேரி டால்டன், சோனா மகேஷ் ,காங்கிரஸ் நிர்வாகி இயேசுதாஸ், கருணாகர பாண்டியன், சுரேஷ் ராஜபாண்டியன், ஏ .பி. என்.குணா, நாகல்குளம் காசி, பாண்டியன், சிவா, பூதத்தான் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.