திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெருப்பெரிச்சல் பஞ்சாயத்து தற்போது மாநகராட்சியின் நாலாவது வார்டு பெரிய புதூர்
65 ஆண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டுள்ள, ஆரம்பப் பள்ளியில் கழிவறை வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கை இந்தப் பள்ளியில் மிகவும் குறைந்து உள்ளது கடந்த காலங்களில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு பயின்று வந்த நிலையில் தற்போது வெறும் 18 மாணவர்களே இந்தப் பள்ளியில் பயின்று வருகின்றார்கள் மாணவர்கள் குறைவு காரணத்தை பள்ளி ஆசிரியரிடம் கேட்ட பொழுது இங்கு போதிய கழிப்பட வசதிகள் இல்லை ஆதலால்
இங்கு மாணவர் சேர்க்கையும் இல்லை என்று தெரிவித்ததோடு தற்போது இருக்கும் மாணவர்களும் கழிவறைக்குச் செல்ல பள்ளியை தாண்டி 200 மீட்டருக்கு அருகாமையில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகின்றார்கள் அதற்கும் ஆசிரியர்கள் காவல் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது காரணம் அருகாமையில் சுடுகாடு இருப்பதால் மாணவர்கள் அச்சமடைவார்கள் என்கின்ற எண்ணத்தோடு ஆசிரியர்கள் பின் தொடர்ந்து கழிவறைக்கு அழைத்துச் சென்று வருகின்றார்கள்
இதற்கான தீர்வு விரைவாக செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் மாணவ மாணவியர்களும் மற்றும் பள்ளி ஆசிரியர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.