சாலையோரங்களில் கொட்டப்படும் உணவகங்களின் எச்சில் இலை.கூலிபாளையம் நால்ரோடு சந்திப்பிலிருந்து வாவிபாளையம் செல்லும் வழியில் சாலையோரமாக குப்பைகள் மற்றும் ஹோட்டல்களில் சாப்பிட்ட எச்சில் இலைகளும் கொட்டப்பட்டு குவியலாக காணப்படுகிறது பிரதான தனியாருக்கு சொந்தமான பள்ளி அருகாமையில் இந்த குப்பை ஒட்டி இருப்பதால் துர்நாற்றங்கள் வீசி வருகின்றது மேலும் அந்த எச்சில் இலைக்கு தெரு நாய்கள் ஒன்று கூடி மீதமான உணவுகளை சாப்பிட்டு ஒன்றைக் கொன்று சண்டையிட்டுக் கொண்டு நடுரோட்டில் வந்து விடுவதால் வாகன விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெற்றோர்கள் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டு குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்துள்ளார்கள் இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அங்கு கொட்டப்படும் குப்பைகளை அகற்றி நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்
திருப்பூர் : சாலையோரங்களில் கொட்டப்படும் உணவகங்களின் எச்சில் இலை!!
August 01, 2024
0