உலகிலேயே இளைய சமுதாய மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று, சராசரி வயது 28 ஆண்டுகள், அதில் 65% மக்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள். மத்திய அரசு 2030 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் 78.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது. 2023-24 பொருளாதார ஆய்வின்படி அதிகரித்து வரும் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்கேற்பைப் பண்ணை அல்லாதத் துறைகளில் பூர்த்தி செய்ய 2024-25 யூனியன் பட்ஜெட்டில் இணைக்கப்பட்ட வேலைவாய்ப்பு - ஊக்கத்தொகைகளில் (ELI) கவனம் செலுத்துகிறது.
மத்திய நிதியமைச்சர் வேலைவாய்ப்புக்கான பிரதம மந்திரியின் தொகுப்பை வெளியிட்டார், அதில் ஐந்து ஆண்டுகளில் சுமார் 4.1 கோடி இளைஞர்களுக்கு ஐந்தாண்டு காலப்பகுதியில் சுமார் ரூ.2.1 லட்சம் கோடி செலவில் வேலை வாய்ப்புகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஐந்து திட்டங்கள் அடங்கியுள்ளன.
தொகுப்பின் முதல் திட்டமானது, முறையான துறைகளில் புதிதாகப் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ரூ.15,000 மூன்று தவணைகளில் நேரடிப் பணப் பலன் பரிமாற்றம் மூலம் ஒரு மாத ஊதியம் ரூ.1 லட்சம் சம்பளத் தகுதியுடன் சுமார் 20 லட்சம் இளைஞர்களுக்கான இந்த திட்டம்.இரண்டாவது திட்டம் உற்பத்தித் துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும், முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் இபிஎஃப்ஓ பங்களிப்பைப் பொறுத்து, நான்கு ஆண்டுகளுக்கு சுமார் 30 லட்சம் இளைஞர்கள் பயனடைவார்கள். மூன்றாவது திட்டமானது, அனைத்து துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பை உள்ளடக்கும் மற்றும் ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் அவர்களின் EPFO பங்களிப்பிற்காக அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.3000 வரை முதலாளிகளுக்கு நன்காவது திட்டம் 1000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை ஒரு ஹப்-அண்ட்-ஸ்போக் மாதிரியில் ஐந்தாண்டு காலத்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்காக அமைக்கும். இறுதியாக, தொகுப்பின் ஐந்தாவது திட்டம் ஒரு கோடி இளைஞர்களுக்கு 12 மாதங்களுக்கு, சிறந்த 500 நிறுவனங்களில் ஐந்தாண்டு காலத்திற்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகையுடன் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. மற்றும் ஒரு முறை உதவியாக ரூ.6000. இவ்வாறு, முதல் மூன்று திட்டங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்கின்றன மற்றும் கடைசி இரண்டு திட்டங்கள் இளைஞர்களின் திறன் மற்றும் மேம்பாட்டிற்கான தளத்தை வழங்குகிறது.
இளைஞர்களுக்குவேலைவாய்ப்பை வழங்குவதற்கான பொதுவான ஏற்பாடுகளுடன், மத்திய அரசும் சுமார் ரூ.3 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்து, பெண்கள் தலைமையிலான மேம்பாட்டு முயற்சிகளுக்கு, பணிபுரியும் பெண்கள், தங்கும் விடுதிகள் மூலம் தங்குவதற்கான ஏற்பாடுகள் உட்பட, குறிப்பாக உற்பத்தித் தொழில்களில் உள்ளவர்களுக்கு இது பெரிதும் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு அறிவித்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறையில் 60% தொழில் முனைவோர் பெண்களாக இருப்பதால், அவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். வகையில் 'முத்ரா' கடன்களின் 'தருண்' பிரிவின் கீழ் கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது.
கூடுதலாக, அவர்களுக்கு முறையான கடன் தேவைப்படுவதால், பிணையில்லா கடன்களை வழங்குவது, MSME துறையில் உள்ள பெண் தொழில் முனைவோர்களுக்கு ஒரு மாற்றமாக அமையும்.
இந்தஏற்பாடுகள்பெண்களிடையே வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல், நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும். மேலும், அதிகாரம் பெற்ற பெண்கள் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் மற்றும் தலைமைப் பொருப்புகளை ஏற்றுக்கொள்வார்கள், சமூக மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் மற்றும் சமத்துவ கலாச்சாரத்தை முக்கியமாக, 'விக்சித் பாரத் 2047' என்ற இலக்கை அடைவதில், உறுதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பணியாளர்களை உருவாக்குவதற்கான மத்திய அரசின் உறுதியான உறுதிப்பாட்டை யூனியன் பட்ஜெட் எடுத்துக்காட்டுகிறது.
