திருவண்ணாமலை: செய்யாறு பல்நோக்கு மருத்துவ முகாம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் 225 பேருக்கு மருத்துவ சிகிச்சை
8/25/2024
0
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ரிவர் சிட்டி லயன் சங்கம் மற்றும் செய்யார் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் இணைந்து மாபெரும் இலவச பல்நோக்கு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முகாம் செய்யாறூ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது பல்நோக்கு மருத்துவமனை செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் ரிவர் சிட்டி லயன் சங்க தலைவர் எஸ். சண்முகம், பொருளாளர் ஜெ.வெங்கடேசன், வணிகர்கள் சங்க செயலாளர் டி.எம்.அக்கீம்பாஷா, பொருளாளர் டி.தேவன், மாவட்ட துணை தலைவர் வி.தெய்வசிகாமணி, துணை செயலாளர் கே.கோபிராஜ், மாவட்ட பிரதிநிதி ஆர்.தில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.ஜெயகாந்தன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜி.அசோக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முகாமில் நரம்பியல் மருத்துவர் சீனிவாசன் மாரியப்பன், குடல் இறப்பை மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர் டி.பெருங்கோ, பொது அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.கீதா பிரியா, மனநல மருத்துவர் மரியா ஆண்டனி, காது மூக்கு தொண்டை மருத்துவர் எம்.விக்னேஷ், எழும்பியல் மருத்துவர் கே.வி.ஜெயபிரகாஷ், பொது மருத்துவர் டி.டி.கோபிநாத், மகப்பேறு மருத்துவர் ஹேரோஷா, தோல் மருத்துவர் ஜி.தேவி, இயன்முறை மருத்துவர் கே.கண்மணி, கண் மருத்துவ சிறப்பு ஆலோசகர் ஆசாராணி, சுகாதார மேற்பார்வையாளர் அருளரசு ஆகியோர் சிகிச்சை அளித்து ஆலோசனைகளை வழங்கினர் மேலும் முகாமில் 225 பேர் சிகிச்சை பெற்றனர். மேல் சிகிச்சைக்காக 150 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். வணிகர்கள் சங்க நிர்வாகிகள் பாபு, பாலு, சரவணன், ரவி, ரிவர் சிட்டி லயன் சங்க மாவட்ட தலைவர்கள் மதியழகன், விஜயகுமார், தி.காசீனிவாசன், பி.எல்.ரவி, எஸ்.அருண், பி.நடராஜன், எம்.புகழேந்தி, பார்த்திபன், பிரேம்குமார், ரவிக்குமார், செந்தில், சங்கர், அஜித்குமார், ராஜன், திருமலை கண்ணன், கார்த்தி, என்.சீனிவாசன், வெங்கடேசன், அருண், ராஜி, துரைசாமி, ஆர்.கணேசன், ஆர்.புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
