வேலூர் மாவட்டம், மூஞ்சூர்பட்டு குக்கலப்பள்ளி மற்றும் இலவம்பாடி ஆகிய மூன்று இடங்களில் மரகத பூஞ்சோலை அமைக்கப்பட்டு அந்த திட்டத்தில் மரக்கன்றுகள் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இலவம்பாடியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மரகத பூஞ்சோலையை காணொளி காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து வேலூர் மாவட்ட உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் மரகத பூஞ்சோலையின் கதவை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேலூர்: இலவம்பாடியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மரகத பூஞ்சோலை அமைப்பு!
August 16, 2024
0