வேலூர் மாவட்டம்,பேரணாம்பட்டு நகராட்சி சார்பில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நகர மன்றத் தலைவர் வி பிரேமா தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நகர மன்ற துணைத் தலைவரும் பேரணாம்பட்டு நகர திமுக செயலாளருமான ஆழியார் ஜூபேர் அஹமத் , நகராட்சி ஆணையர் வேலவன், நகராட்சி பணி மேற்பார்வையாளர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலநாது கொண்டனர். சுதந்திர தின விழாவில் தேசத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சுதந்திர போராட்ட வரலாற்று நிகழ்வுகள் நினைவு கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைதொடர்ந்து அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
வேலூர் : பேரணாம்பட்டு நகராட்சியில் சுதந்திர தினவிழா கோலாகலம்!
August 16, 2024
0