கிருஷ்ணகிரி : சுகாதாரத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா ??
8/14/2024
0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது இதனைச் சுற்றி 25 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது கிராமங்களில் இருந்து பிரசவம் மற்றும் விபத்து என சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மருத்துவரை பார்க்கச் சென்றால் மருத்துவமனையில் மருத்துவர்கள் இருப்பதில்லை செவிலியர்கள் மட்டுமே இருக்கின்றார்கள் பகல் நேரங்களில் குறிப்பிட்ட நேரங்களுக்கு மேல் மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி செய்வதில்லை பொதுமக்கள் கேட்டால் மருத்துவர்கள் இல்லை உங்களுக்கு என்ன வேண்டும் என்ன பிரச்சனை என செவிலியர்கள் நோயாளிகளிடம் கேள்வி கேட்கின்றனர் இல்லையென்றால் நீங்கள் வேறு மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் என்று அலட்சியமாக நோயாளிகளிடம் செவிலியர்கள் பதிலளிக்கின்றனர் இரவு நேரங்களில் மருத்துவர்கள் வசதி இல்லை என செவிலியர்கள் வேறொரு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்பதற்கு வசதிகள் இருந்தும் செவிலியர்கள் மட்டுமே மருத்துவமனையில் இருக்கின்றனர் பிரசவத்திற்கு ஆறு படுக்கையை கொண்ட பெட் இருந்தும் ஒருவர் கூட மருத்துவமனையில் தங்கி நோய்களை குணப்படுத்திக் கொண்டு வீடு திரும்புவது இல்லை தனியார் மருத்துவமனையில் சென்று மருத்துவம் பார்ப்பதற்கு வசதி இல்லாததால் நோயாளிகள் அரசு மருத்துவமனையில் தேடிச் செல்கின்றனர் அங்கு மருத்துவர் இல்லை என்று அலட்சியமான பதிலை கூறி நோயாளிகளை வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர் செல்லும் வழியில் உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படுகின்றது ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து வசதிகளும் இருந்தும் மருத்துவம் பார்க்க அலட்சியம் காட்டும் நிலைமை மாறுமா என பொதுமக்கள் கண்ணீருடன் எதிர்பார்ப்பு இதைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களின் நலன் கருதி 24 மணி நேரமும் மருத்துவ சேவை தொடருமா? பொருத்திருந்து பார்போம்.
