தென்காசிஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகளை வரவேற்கும் விதமாக கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் முதுகலை மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் மூலம் முதலாமாண்டு மாணவிகளை மகிழ்வித்தனர். கல்லூரிச் செயலர் ம.அன்புமணி, முதல்வர் முனைவர் பெ.நாகேஸ்வரி நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர். ம.துர்காதேவி வரவேற்றார். மாணவப் பேரவைத் தலைவி மோகனா ஸ்ரீ நன்றியுரை ஆற்றினார். நுண்கலைச் செயலர் நந்தினி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். குழு உறுப்பினர்கள் முனைவர் எம்.செல்வி, முனைவர் எம்.அனுஜா, ஜி.தீபா, முனைவர் வி.ஜெய்சுதா தேவி, முனைவர் எஸ்.கிருஷ்ணதேவி, எஸ்.முத்துக்கலா, முனைவர் கே.செல்வராணி, முனைவர் இ.சண்முகப் பிரியா, முனைவர் என்.சுஜா ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்தனர்.