வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடக்கம்!
வேலூர் முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மாநகரத்திற்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி ஓட்டேரி பகுதியில் உள்ள அரசு முத்துரங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆகிய பள்ளிகளில் பயின்று தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் கல்லூரி முதல்வர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் கலந்துகொண்டு தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அவருடன் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு. பாபு, வேலூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், கணியம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், பகுதி செயலாளர் தங்கதுரை, வட்ட செயலாளர் விநாயகம், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரி மாணவர்கள் ரூபாய் 1000 பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.